தமிழகத்தில் இருந்து 22 வயதில் துபாய்க்கு வந்த ஊழியர்.. பாஸ்போர்ட்டை தொலைத்து 24 வருடங்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை! 46 வயதில் பெற்றோரை சந்தித்த தருணம்!
தமிழகத்தில் இருந்து 22 வயதில் துபாய்க்கு வந்த ஊழியர்.. பாஸ்போர்ட்டை தொலைத்து 24 வருடங்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை! 46 வயதில் பெற்றோரை சந்தித்த தருணம்!

தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் வெளங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆ.குமார். இவர் கடந்த 1998ம் ஆண்டு, தனது 22வது வயதில் துபாயில் கூலி வேலைக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் ஒரே வருடத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்த குமார், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் 24 ஆண்டுகளாக துபாயில் தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில், இவருக்கு எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் வயிறு பகுதியில் அடிபட்டு குடல் முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து, அவரது பெற்றோர்கள், அமீரக காயிதே மில்லத் பேரவை (இந்திய யூனியன் லீக்  IUML ) நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள். தங்கள் மகனை எப்படியாவது மீட்டு நாடு திரும்ப உதவ வேண்டுகோள் விடுத்தனர்.


நிலைமையை புரிந்து கொண்ட அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொதுசெயலாளர் M.S.A பரக்கத் அலி, ஊடகத்துறை செயலாளர் M.K ரிபாய் மற்றும் காரமா பகுதி செயலாளர் தர்வேஷ் ஆகியோர் குமாரை நேரில் சந்தித்து, அவரை இந்திய துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிகாரிகளிடம் நிலைமையை எடுத்துக் கூறி, குமாரை இந்தியா அனுப்ப உதவி கோரினார்கள்.

குமார் அமீரகம் வந்து 24 வருடம் ஆகிவிட்டதாலும், அவரிடமோ அவர் பெற்றோர்களிடமோ இவரின் பாஸ்போர்ட் நகல் மற்றும் அவர் இந்தியர் என்பதற்கான வேறு எந்த ஆதாரம் இல்லாததாலும், தமிழக அரசிடமிருந்து இவர் இந்தியர் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே இந்தியா அனுப்ப முடியும் என இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments