மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி - குமாரபுரம் - கடம்பூர் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
அதன்படி, திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண். 22627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை), மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண். 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்
சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20691 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்ரெயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
செந்தூர் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல், மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16106 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், இன்றும், நாளையும் திருச்செந்தூர் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயில் திருச்சியில் இருந்து 11 மற்றும் 12-ந் தேதிகளில் அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரெயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ரெயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி மற்றும் நெல்லை வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். மறுமார்க்கமாக குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில் நிலையங்களை தவிர்த்து நெல்லை, தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும்.
Photos Credit : Siva Prakash
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.