புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிளை சார்பில், இந்த ஆண்டுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அல்ஹா) சிறப்புத் தொழுகை நபிவழியில் திடலில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து கிளை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் 'முஸல்லா' எனப்படும் திறந்தவெளித் திடலுக்குச் சென்று தொழுவிப்பவர்களாக இருந்துள்ளார்கள் (ஆதாரம்: புஹாரி 956, முஸ்லிம் 1612). இந்த உன்னதமான நபிவழியைப் பின்பற்றி, இன்ஷா அல்லாஹ் வரும் 28.05.2026 (வியாழக்கிழமை) காலை 7.00 மணிக்கு கோபாலப்பட்டிணம் 'அரண்மனை தோப்பு' திடலில் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் பெருநாள் உரை நடைபெறவுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் மற்றும் வசதிகள்
பெண்களுக்கான ஏற்பாடு
பெருநாள் தொழுகையில் பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் வண்ணம் அவர்களுக்குத் தனி இடவசதியும், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகத்தின் வேண்டுகோள்
தொழுகைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் காலதாமதம் மற்றும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது வீடுகளிலேயே உளூ (தூய்மை) செய்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்புனிதமிக்க பெருநாள் தொழுகை மற்றும் பிரசாரக் கூட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை நிர்வாகம் சார்பாக அன்போடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழுகை நடைபெறும் இடம் (கூகுள் மேப்): அரண்மனை தோப்பு திடல்
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.