புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாளை மே.28 ஹஜ் பெருநாள் (தியாகத் திருநாள்) சிறப்பு தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்ஷா அல்லாஹ் நாளை 28-05-2026 (வியாழக்கிழமை) ஹஜ் பெருநாள் தொழுகை கோபாலப்பட்டிணம் ஈத்கா தொழுகை மைதானத்தில் காலை சரியாக 7:00 மணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும்.
மழை பெய்தால் மாற்று ஏற்பாடு
ஒருவேளை நாளை மழை பெய்தால், சிறப்பு தொழுகை கீழ்க்கண்ட பள்ளிவாசல்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
பெண்களுக்கான தொழுகை இடங்கள் (காலை 7:00 மணி)
அவுலியா நகர் பள்ளிவாசல்
கடற்கரை பள்ளிவாசல்
காட்டுக்குளம் பள்ளிவாசல்
ரஹ்மானியா பெண்கள் மதரஸா
ஆண்களுக்கான தொழுகை இடம் (காலை 7:30 மணி)
பெரிய பள்ளிவாசல்
பொதுமக்கள் அனைவரும் இந்த அறிவிப்பைப் பின்பற்றி, குறித்த நேரத்திற்கு வருகை தந்து பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு ஜமாஅத் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.