சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் விசாரணை தலைமை பதிவாளர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின்னர் ஐகோர்ட்டு திறக்கப்பட்டு வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை மட்டும் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘வருகிற மார்ச் 3-ந் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.இந்த வசதியை சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை வக்கீல்கள், வழக்காடிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments