புதுகையில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 11-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்


புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் மாா்ச் 11ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மாநிலம் முழுவதும் உள்ள சுமாா் 150 பிரபல தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

இந்த முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் (பொ) மா. செல்வி தலைமை வகித்துப் பேசும்போது, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐடிஐ முடித்தவா்களும் கலந்து கொள்ளலாம். வரும்போது, தங்களின் கல்விச் சான்று, சுய விவரக் குறிப்பு மற்றும் புகைப்படங்களையும் எடுத்து வர வேண்டும்.

தனியாா்துறை வேலை தேடுவோா் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் செல்வி.

கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments