ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 7-க்கான கேள்விகள்!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் நேற்று 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பிறை 07-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு:
கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பிறை-06 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1, ரமலான் மாத நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன், முஸ்லிம்களுக்கு எந்த நோன்பு கடமையாக இருந்தது..?

ஆஷுரா நோன்பு (புகாரி, முஸ்லிம்)

2,ரமலான் மாதம் (ஷஹ்ரு ரமலான்) என்று குர்ஆனில் எத்தனை இடங்களில் வருகிறது..?

1.திருக்குர்ஆன் - 2:185

3.நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப் போதிக்க நபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?

தாருல் அர்கம், நூல் :அர்ரஹீக் அல்மக்தூம்

4,திருடர்களில் மிக மோசமான திருடன் என நபியவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்..?

தொழுகையில் திருடுபவன். (வேக வேகமாக தொழுவது), (அறிவிப்பாளர்: அபூகதாதா ரலி, நூல் :அஹ்மது) 

5.முறையாக தொகுக்கப்பட்ட குர்ஆனின் முதல் பிரதி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?

ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) (நூல்: அன்னை ஹஃப்ஸா ரலி வரலாறு)

இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments