கோபாலப்பட்டிணத்தில் கோடை மழையில் நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளத்தில் மழை நீர் நிரம்பாததால் மக்கள் ஏமாற்றம்!கோபாலப்பட்டிணத்தில் கோடை மழையில் நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளத்தில் மழை நீர் நிரம்புவதில் தடுமாற்றம் ஆனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் ஆகிய இரண்டு குளங்களை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல மழை பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதுடன் மக்களுக்கும் தேவை பூர்த்தியானது.

பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கோடை மழை பெய்தது. அப்படி இருக்கையில் இரண்டு குளங்களும் ஒர் அளவு நிரம்பியிருக்க வேண்டும்.  ஆனால் குளத்திற்கு வரும் கால்வாயில் புதர் மற்றும் கோரை வளர்ந்து தூர் வாரப்படாததால் குளங்களுக்கு தண்ணீர் சரிவர செல்லவில்லை. இனி வரும் காலங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணியை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. கோடை மழை பெய்த அன்று காட்டு குளம் அருகே உள்ள வாய்க்காலில் புதர் மற்றும் கோரை வளர்ந்து தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் JCB இயந்திரம் மூலம் வாய்க்கால் தூர்வாரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது மழை பெய்த காரணமாக இரண்டு குளங்களில் கொஞ்சமாக தண்ணீர் இருப்பதால் மக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.

தற்போது கோடை காலமாக உள்ளதால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளங்கள் நிறையும் என ஏக்கத்துடன் உள்ளனர்.

கடந்த காலங்களில் இரண்டு குளங்களில் ஏதாவது ஒரு குளத்தில் உள்ள தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இரண்டு குளங்களிலும் உள்ள தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டதால் குளிப்பதற்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். இனி வரும் காலங்களில் ஜமாத் நிர்வாகம் கோபாலப்பட்டிணத்தில் உள்ள இரண்டு குளங்களில் உள்ள தண்ணீரை ஒரே நேரத்தில் வெளியேற்ற வேண்டாம் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ரமலான் மாதத்தில் குளங்கள் பயன்பாடு

பொதுவாக கோபாலப்பட்டிணத்தில் ரமலான் மாதத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் தான் குளிப்பார்கள். அஸர் தொழுகை முடிந்து நண்பர்களுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மோலாக குளத்தில் குளித்து மகிழ்வது வழக்கம்.

தற்போது இந்த வருடம் நோன்பு காலத்தில் இரண்டு குளத்திலும் தண்ணீர் இல்லாததால் கவலையாக உள்ளனர் நமதூர் மக்கள்.
புகைப்பட உதவி: ஜவாஹிருல்லாஹ், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments