பட்டுக்கோட்டையில் வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு - தீர்மானங்கள் நிறைவேற்றம்









தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் 26.0 3 .2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டை பெரியதெரு என். எஸ் என். பிளாசாவில் நடைபெற்றது

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் வ.விவேகானந்தம் அனைவரையும் வரவேற்றார் .

கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் 

தலைவர் என். ஜெயராமன் 

துணைத் தலைவர் கா.லட்சுமிகாந்தன் 

செயலாளர் வ.விவே காந்தனந்தம்
 
துணை செயலாளர் 
மு.கலியபெருமாள் 

பொருளாளர்
பி சுந்தரராஜுலு 

செயற்குழு உறுப்பினர்களாக 
சி. ஸ்ரீதர், ஜெ.பிரின்ஸ் விஜயகுமார் , ஆ.ராமமூர்த்தி,
இரா.இராஜாராம்  

தணிக்கையாளராக 
ஆ .ராமமூர்த்தி 

பொதுமக்கள் தொடர்பாளராக
கோ. சங்கர் 

மரம் வளர்ப்பு ஒருங்கிணைப்பாளராக வே.சுப்ரமணி 

சரக்கு முனைய மேம்பாடு ஒருங்கிணைப்பாளராக எம் .எஸ்.இராசசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி இரயில் பாதையில் புதிதாக இயங்கவிருக்கும் தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும்  இரயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிடப்பட்டுள்ள பகல் நேர சோழன் அதி விரைவு ரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு இரயில், இராமேஸ்வரம்- செகந்திரபாத் விரைவு இரயில், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு இரயில் ஆகிய விரைவு இரயில்களை விரைவில் நிரந்தர இரயிலாக இரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் .

சிறப்பாக செயல்பட்டு வரும் பட்டுக்கோட்டை இரயில் நிலைய சரக்கு முனையத்திற்கு பாராட்டுக்களும் சரக்கு முனையம் அமைய விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி கோட்ட இரயில்வே  மேலாளர் திரு மணிஷ்அகர்வால் அகர்வால் முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் எம் ஹரிகுமார் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் திரு. செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நிறைவுற்ற பின் இரயில் நிலைய வளாகம் முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பூங்காக்கள் அமைக்கவும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும்,  தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் துணைத் தலைவர் கா.லட்சுமி காந்தன் நன்றி கூறினார் .









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments