ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி!! கலந்துகொண்டு பரிசுகளை வெல்லுங்கள்!!!ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி வரும் 29-03-2023 ரமலான் பிறை 06 முதல் 25 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வது மட்டுமல்லாது மார்க்க அறிவு புத்துணர்வு பெற அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

போட்டியின் நிபந்தனைகள்:
  1. ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
  2. ஒருவர் ஒருமுறை மட்டுமே பதிலளிக்க வேண்டும், ஒருமுறைக்கு மேல் பதிலளித்தால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர். 
  3. ஒரு நாளைக்கு 5 கேள்விகள் என்ற வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.
  4. முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 
  5. 95% சதவீதம் மதிப்பென் எடுக்கும் நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். 
  6. பெயர், ஊர், தந்தை/கணவர் பெயர் ஆகியவற்றை தெளிவாக எழுதவும் நீங்கள் இந்த விண்ணப்பத்தில் எழுதும் பெயரே சான்றிதழில் இடம் பெறும்.

குறிப்பு:
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் ரமலான் பிறை 05-க்குள் (28-03-2023) ரிஜிஸ்டர் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரிஜிஸ்டர் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிஜிஸ்டர் செய்ய கிளிக் செய்யவும்

தினமும் ஸஹர் நேரத்தில் கேள்விகள் GPM மீடியா இணையதளம், வாட்ஸ்ஆப் குழுமம், பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படும். ஆகவே எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint, Joint செய்து கொள்ளுங்கள்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments