ராமநாதபுரத்தில் விமான நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: நவாஸ்கனி எம்.பி கோரிக்கை






இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இதுகுறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில்,

நாடாளுமன்ற மக்களவையில் இராமநாதபுரம் விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என நான் எழுப்பிய கேள்விக்கு விரைவில் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து ராமநாதபுரம் விமான நிலைய பணிகளை துரிதப்படுத்தி விரைவில் விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கைகளை விரைந்து செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட பலர் மலேசியாவில் பணி புரிபவர்களாக, வணிகரீதியாக வசிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் வகையில் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையையும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments