ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 8-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:

கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும் முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிறை 08-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு:
கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பிறை-07 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1.யானைப் படையினரைப் பற்றி அல்லாஹ் எந்த சூராவில் கூறுகிறான்..?

 சூரா அல் ஃபீல் (சூரா எண்:105)

2.முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த பெண் தியாகி (ஷஹீத்) யார்?

சுமையா (ரலி)

3.ரமழானில் உம்ராச் செய்வது இதற்கு ஈடானது என்று எதை நபி  அவர்கள் கூறினார்கள்..?

ஹஜ் செய்வதற்கு 

4.நீங்கள் அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற வசனம் குர்ஆனில் எந்த சூராவில் இடம்பெற்றுள்ளது..?

சூரத்துல் அல இம்ரான், வசனம் 103

5.இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?
 
அபூ தல்ஹா(ரலி)

இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments