ராணி கமலாபதி (போபால்) - ஹஜ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) இடையே‌ நாட்டின் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை‌ பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்





 ராணி கமலாபதி (போபால்) - ஹஜ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) இடையே‌ நாட்டின் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை‌ பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். போபால், மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

விழாவில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய பிரதேச ஆளுநர் மங்கு பாய் பட்டேல், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ரெயில்வே துறையில் மாற்றங்கள் செய்வதுடன், மக்களுக்கு ஏதுவான பயண வசதிகளை ஏற்படுத்துவதே தனது அரசின் நோக்கம் என்றார்.

பின்னர் வந்தே பாரத் ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தபடி, உடன் பயணித்த பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ரெயில் பணியாளர்களிடமும் உரையாடினார்.

இந்த வந்தே பாரத் ரெயில், போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது.  சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 702 கி.மீ.பயண தூரத்தை 7.30 மணி நேரத்தில் கடக்கும் வந்தேபாரத் ரயிலின் அதிகபட்சவேகம் மணிக்கு 160 கி.மீ. பயணிக்கும். இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. அதாவது போபாலிலிருந்து விடியற்காலை 5.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணியளவில் ஆக்ராவின் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அங்கு 5 நிமிடம் நின்று பின்னர் கிளம்பி மதியம் 1:45 மணிக்கு டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதேபோல ரிட்டன் ரயில், புது டெல்லியிலிருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு ஆக்ராவை அடையும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெல்லை போபால் இடையேயன வந்தே பாரத் ரயில், ஆக்ரா, ஜான்சி, குவாலியர் ஆகிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படும் என்பகது குறிப்பிடத்தக்கது.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments