கொரோனா காலத்தில் அறந்தாங்கி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கோரிக்கை






கொரோனா காலத்தில் அறந்தாங்கி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி  போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்

இன்று (31.03.2023) மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா காலத்தில் தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரியும் மேலும் சென்னை, திருப்பதி, திருப்பூர், திருச்செந்தூர் உட்பட பிற மாநிலங்களுக்கும் , மாவட்டங்களுக்கும் சென்ற பேருந்துகளும் சில புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்க கோரியும் மனு அளித்தார் சட்ட மன்ற உறுப்பினர் .  மாண்புமிகு அமைச்சர் அவர்களும் இவற்றிற்கு முன்னுரிமை அளித்து கவனிக்கப்படும் என தெரிவித்தார்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments