ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 14-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.
பிறை 14-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பிறை-13 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1.நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியார்களில் இறுதியாக திருமணம் செய்த மனைவி யார்.-?

மைமூனா ரலி ✅

2. மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபி, அங்கே செய்த தஸ்பீஹ் எது என குர்ஆன் கூறுகிறது-?

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ 
உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்✅


3. குரல்களில் (சப்தங்களில்) வெறுக்கத்தக்க குரல் (சப்தம்) என்று எந்த  உயிரினத்தின் குரலை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.?

கழுதையின் சப்தம் ✅

4. போரில் பிடிக்கப்பட்டு கைதியாக (அடிமையாக) இருந்து,  பின் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக  மாறியவர்கள் யார்.?

ஜுவைரிய்யா (ரலி)
சஃபியா (ரலி)✅

🚨 குறிப்பு: இதில் ஒரு பெயரை குறிப்பிட்டிருந்தாலும் மதிப்பென் உண்டு

5. மதினா நகரை குர்ஆனில் வேறெந்தப் பெயரில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்- ?

யஸ்ரிப் (யத்ரிப்)✅

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments