தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 21-ந் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையும் இடம்பெற்றன.
கடந்த மாதம் 29-ந் தேதி முதல், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை), 3-ந் தேதி (சட்டசபை கூட்டம் இல்லை), 4-ந் தேதி (மகாவீரர் ஜெயந்தி) ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.
3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரம் தொடங்கியது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைப் பணிகள் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும், மாநில அரசின் அழுத்தத்தால் முதல் கட்ட பகுதியில் 45% பணிகள் முடிவுற்றுள்ளதாக மத்தியஅரசு மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா (திமுக), பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.