ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 16-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.
பிறை 16-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொண்டு SUBMIT செய்யவும்.

குறிப்பு: இன்று (ஏப்ரல் 08) சனிக்கிழமை முதல் கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

 🚨 கேள்வி பதில் நிகழ்ச்சியின் இரு முக்கிய விதிமுறை🚨
  1. ஒரு நபர் தனது வேறு, வேறு பெயர்களில் இரண்டு முறை பதில் அனுப்பக் கூடாது. (உதாரணத்திற்கு ஒரு தாயோ, தந்தையோ தனது இரண்டு பிள்ளைகள் பெயரில் இரு முறை பதில் அனுப்பினால் அந்த பதில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).
  2. பதில் அளிக்கக்கூடிய நபர் தனது பெயரில் ஒரு முறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்தால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  3. தனக்கு பதில் தெரிந்தால் முடிந்தளவு மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
பிறை-15 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1. நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களுடன் எத்தனை நபர்கள் உடன் சென்றார்கள் ?பெயர்களை குறிப்பிடவும்.

3 நபர்கள்
1)அபுபக்கர் (ரலி)
2) அப்துல்லாஹ் இப்னு உரைக்குத் (வழிகாட்டி)
3)அமீர் இப்னு புஹைரா (அபூபக்கர் (ரலி)  பணியாளர்
நூல் :- அர் ரஹீக் அல் மக்தூம்

2.மதினாவை நோக்கிய நபியின் பயணத்தில் அவர்கள் இடையில் தங்கிய குகையின் பெயர் என்ன-? அங்கு எத்தனை நாட்கள் தங்கினார்கள் -?

ஸவ்ர் குகை 3 நாட்கள்

3.திருக்குர்ஆனின் ஒரு வசனத்தில் அல்லாஹ் மூன்று காரியங்களை சொல்லி, இவைகளைச் செய்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்கிறான். அது எந்த வசணம்?

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். (அல்குர்ஆன் 24:56)

4. எவற்றை மருந்தாக பயன்படுத்த வேண்டாம் என்று நபியவர்கள் தடை செய்தார்கள்? ஆதாரத்தோடு பதிலிடுக.

விஷம் (அசுத்தமானவற்றை), சுனன் இப்னு மாஜா 3450

5.ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அந்த உணவை உண்பவருக்கு பெரும்,பெரும் நோய்கள் எதுவும் ஏற்படாது என நபியவர்கள் எதை குறிப்பிட்டார்கள்.?

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் காலையில் தேன் சாப்பிடுவது (சுனன் இப்னு மாஜா 3441)

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments