புதுக்கோட்டையில் கோடைகால நீச்சல் பயிற்சியில் சேர முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்: வருகிற 25-ந் தேதி தொடக்கம்!



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பபட்டு வருகிறது. நீச்சல்குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின்கீழ் (Learn to Swim Course) 2023-ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்டுள்ளபடி பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும். பயிற்சி கட்டணம் ரூ.1200/- & (GST 18%) ஆகும்.

பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ள நாட்கள் 25.04.2023 முதல் 07.05.2023 வரை மற்றும் 09.05.2023 முதல் 21.05.2023 வரை மற்றும் 23.05.2023 முதல் 04.06.2023 வரை. பயிற்சி நேரம் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 5.00மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00மணி வரை ஆகும்.
 
மேற்காணும் நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை கீழ்க்காணும் முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கம், புதுக்கோட்டை. தொலைபேசி எண் 04322-222187, அலைபேசி எண் 7401703498 ஆகும். பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments