மீன் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம் மாவட்ட ஆட்சியர் தகவல்: விண்ணப்பிக்க மே.3-ந் தேதி கடைசி நாள்!



மீன் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமும் கூடிய 15 புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும்). மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும்.

கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய, மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன்வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை அடுத்த மாதம் (மே) 3-ந் தேதிக்குள் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். அல்லது தபாலில் அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04322 266994, செல்போன் 93848 24268 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments