சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் & பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ரெயில் சேவை
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று 8-ந் தேதி சென்னை வந்திருந்தார். இதன் ஒரு பகுதியாக தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர விரைவு ரெயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் விழுப்புரம், கடலூர் திரிப்பாதிரிபூலியூர் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை, அறந்தாங்கி காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ஏமாற்றம்
திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் உள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த காரைக்குடி- சென்னை விரைவு ரெயில் தினசரி இயக்குவதில் காலதாமதம் ஆகுவதால், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஆனால் இந்த ரெயில் அதிராம்பட்டினம் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்காதது பயணிகளிடையே ஏமாற்றம் அளித்துள்ளது.
அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல கோரிக்கை
அதிராம்பட்டினத்தில் சென்னைக்கு தினமும் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் செகந்திராபாத் இராமேஸ்வரம் விரைவு ரெயில் நின்று சென்று வருகிறது. இதில் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு ரெயிலில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில் அதிராம்பட்டினத்தில் நின்று சென்றால் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே செகந்திராபாத் விரைவு ரெயில் நின்று செல்வது போல் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பேராவூரணியில் நின்று செல்ல கோரிக்கை
பேராவூரணியில் இருந்து சென்னைக்கு தினமும் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.
பேராவூரணி ரெயில் நிலையத்தில் செகந்திராபாத் இராமேஸ்வரம் விரைவு ரெயில் நின்று செல்லவில்லை தற்போது அறிவிக்கப்பட தாம்பரம் - செங்கோட்டை ரயிலுக்கு நிறுத்தம் இல்லை இதனால் நேரடியாக பேராவூரணியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லை
செகந்திராபாத் - இராமநாதபுரம் விரைவு & தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று சென்றால் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
எனவே செகந்திராபாத் - இராமேஸ்வரம் தாம்பரம்-செங்கோட்டை இரண்டு ரெயிலும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.