மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்


புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. 

இந்த நிலையில் வடக்கம்மாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் நிசார் என்பவரின் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. இந்த திருக்கை மீன் புள்ளித்திருக்கை என்ற வகையை சேர்ந்தது ஆகும். 65 கிலோ எடை கொண்ட இந்த திருக்கை மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 

இது ரூ.7 ஆயிரத்து 800-க்கு ஏலம் போனது. இந்த திருக்கை மீனை உள்ளூர் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார். இந்த ராட்சத திருக்கை மீனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments