கோபாலப்பட்டிணம் தோப்பு GUYS இளைஞர்கள் சார்பாக ஆதரவற்ற முதியோர் இல்லம் சாப்பாடு வழங்குதல் மற்றும் கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களுக்கு இப்தார் விருந்து வழங்கல்!கோபாலப்பட்டிணம் தோப்பு GUYS இளைஞர்கள் சார்பாக ஆதரவற்ற முதியோர் இல்லம் சாப்பாடு வழங்குதல் மற்றும் கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இப்தார் ஏற்பாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தோப்பு GUYS இளைஞர்கள் சார்பாக 17.04.2023 அன்று கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இப்தார்க்கு தேவையான வடை புருட்சாலட் ஜீஸ் போன்றவைகள் தோப்பு GUYS இளைஞர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

கோட்டைப்பட்டிணத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் தோப்பு Guys இளைஞர்கள் சார்பாக உணவு வழங்கப்பட்டது. 

மேலும் காப்பகத்தில் மின்விசிறி (பேன்) இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்  அதனை தொடர்ந்து தோப்பு Guys இளைஞர்கள் சார்பாக காப்பகத்திற்கு மின்விசிறி வழங்கப்பட்டது. 

உங்களுடைய சேவைகளை தொடர்ந்து செய்திட GPM மீடியா குழு சார்பாக வாழ்த்துகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments