சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மும்முறை (Tri Weekly) ரயில் அதிகாரபூர்வ அட்டவணை வெளியிட்டது தெற்கு ரயில்வே


திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை 
அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மும்முறை (Tri Weekly)    அதிகாரபூர்வ அட்டவணை தெற்கு ரயில்வே வெளியிட்டது 

செய்தி சுருக்கம் :

வண்டி எண் 20683/20684 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் 29-05-2024 வரை வாராந்திர சேவையாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செங்கோட்டையில் இருந்து திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.16-04-2023 (ஞாயிற்றுகிழமை) முதல் தாம்பரத்தில் இருந்தும் 17-04-2023 (திங்கள்கிழமை முதல் செங்கோட்டையில் இருந்தும் சேவை துவங்கும் வழக்கமான வாரம் மும்முறை சேவைகள்  01-06-2023 (வியாழக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
20683/20684‌ தாம்பரம் -செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் சிறப்பு சேவையாக 08.04.2023 அன்று
இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

வழக்கமான ரயில் வாராந்திர சேவையாக இரண்டு மாதங்களுக்கு அதாவது 29.05.2023 வரை இயக்கப்படும்.

தாம்பரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் 

செங்கோட்டை திங்கட்கிழமைகளில்

சேவை தொடங்கும் தேதி
 
தாம்பரம்: 16.04.2023 முதல் அமலுக்கு வரும்.

செங்கோட்டை 17.04.2023 முதல் அமலுக்கு வரும்.

முதன்மை பராமரிப்பு : தாம்பரம்
OEA: செங்கோட்டை

LWSCN-5, LWACCNE-5, LWACCW-2. LS-3, LWRRM-2 17 பெட்டிகள்

இழுவை:

TBM-TVR: எலக்ட்ரிக், 
TVR-SCT: டீசல்

இந்த ரயிலின் அதிர்வெண் 01.06.2023 முதல் தாம்பரம் முதல் 02.06.2023 செங்கோட்டை. 

வாரந்தோறும் மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். 

அதன்பிறகு செயல்படும் நாட்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Ex.தாம்பரம்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 

Ex.செங்கோட்டை: திங்கள், புதன், வெள்ளிவண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை 

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்   
திங்கள் புதன் வெள்ளி  கிழமைகளில்
காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

திருவாரூர் டு காரைக்குடி  ஊர்களின் அட்டவணைகள்

திருவாரூர்(01.50 AM), 
திருத்துறைப்பூண்டி(02.29AM), முத்துப்பேட்டை (02.58 AM),
பட்டுக்கோட்டை (03.26 AM), 
அறந்தாங்கி (04.10 AM), 
காரைக்குடி (04.58 AM)

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் 

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்   
செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில்
காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

காரைக்குடி டு திருவாரூர்  ஊர்களின் அட்டவணைகள் 

காரைக்குடி (09.33 PM), 
அறந்தாங்கி (09.57 PM), 
பட்டுக்கோட்டை (10.43‌ PM), 
முத்துப்பேட்டை(11.09PM),  திருத்துறைப்பூண்டி  (11.37 PM),
திருவாரூர் (12.15 AM),

எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு 
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை 
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு 
திருநெல்வேலி சந்திப்பு 
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி சந்திப்பு 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் 

இதற்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments