திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே ஏப்ரல் 10 முதல் ரயில் சேவை இயக்கம் - அதிகாரபூர்வ அட்டவணை அறிவிப்பை வெளியிட்டது தெற்கு ரயில்வே 

 
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ஏப்ரல்.10-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது.

மாண்புமிகு  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 08.04.2023 அன்று தொடக்க விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

வழக்கமான ரயில் சேவைகள் 10.04.2023 முதல் தொடங்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இடையே 37 கி.மீ தொலைவுள்ள ரயில் பாதையை ரூ.288 கோடி செலவில் அகல ரயில் பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் பணி மேற்கொள்ள தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை 20-1-2005 முதல் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த அக்.22-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதன் பேரில், இந்த வழித்தடத்தில் ஜன.29-ம் தேதி முதல் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது ..

இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி. இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது.

அதன்படி, ஏப்ரல்.10-ம் தேதி முதல் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளதாக .  தகவல் வெளியாகியுள்ளது

இந்த வழித்தடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, மற்ற 5 நாட்களும் தலா 2 சேவைகள் அளிக்கப்பட உள்ளன. 

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 

திருத்துறைப்பூண்டி ரயில்நிலையத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் 7.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். 

அகஸ்தியம்பள்ளி  - திருத்துறைப்பூண்டி 

மறு வழித்தடத்தில், காலை 7.55 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு காலை 8.50 மணிக்கு திருத்துறைப்பூண்டி வந்தடையும்.

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 

பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். 
 
அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி 

மாலை 4.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். 

இந்த ரயில் கரியாப்பட்டினம், குரவப்புலம், நெய்விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருவாரூர், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments