கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கேள்வி-பதில் போட்டி பரிசளிப்பு மற்றும் கேள்விக்கான பதில் வெளியீடு!




கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக கடந்த ஆண்டு முதல் ரமலான் மாதத்தில் பெண்களுக்கான கேள்வி-பதில் போட்டி நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டி இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த கேள்வி-பதில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று 01/05/2023 திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பெண்கள் மதரஸா வளாகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரிசளிப்பு நிகழ்ச்சியின் துவக்க உரையாக அன்னை கதீஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் நிஷானா அவர்கள் துவங்கி  வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களின் பெயர்:

முதல் இடம்                : ஆமினா அம்மாள் w/o செய்யது பாதுஷா

இரண்டாம் இடம்    : சாஹிதா - முகம்மது

மூன்றாம் இடம்:

1, ஹபீப் நிஷா w/o அப்துல் ரசாக்
                                    
2, ஜன்னத்துல்  ஃபிர்தவுஸ் D/o அய்யூப் கான்

நான்காம் இடம்:

1, பாசிலா பர்வீன் D/o தாகீர் அலி
                                             
2, பாத்திமா ரிஹானா W/O  ஃபிர்தவுஸ்  கான்

இப்போட்டியில் சுமார் 230 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அதில் 6 போட்டியாளர்கள் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்கு இடங்களுக்கான பரிசுகளை பெற்றன. 

9 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
 







கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இமாம் அபூ ஜஅஃபர் அத்தஹாவி ( ரஹ்) அவர்கள் எழுதிய அகீததுல் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்ற புத்தகம் சிறப்பு பரிசாக என்றும் உதவும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.

கேள்வி-பதில் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

கேள்வி-பதில் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் பரிசுகளை வென்ற அனைவருக்கும் GPM மீடியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இந்த ஆண்டு 2023 ரமலான் மாதத்தில் நடைபெற்ற கேள்வி-பதில் போட்டியின் விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.



பரிசளிப்பு  போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு உடலாலும், பொருளாலும் உதவி செய்த அனைவருக்கும் என்றும் உதவுங்கள் சார்பாக நன்றியினையும், சலாத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மார்க்கம் சார்ந்த பணிகளை சிறப்பாக செயல்படுவதற்கு என்றும் உதவும் கரங்களுடன் உங்களது கரங்களை இணைத்து கொள்ளுங்கள்.

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் 
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளை, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments