கோபாலப்பட்டிணத்தில் நடந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மே-1 தொழிலாளர் தின கிராம சபை கூட்டம்!!கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் தொழிலாளர் தினம் மே-1 கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று  மே 1ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊாராட்சியில் தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டம் நேற்று 01/05/2023 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையில் நடைபெற்றது..
ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்றார். கடந்த கால வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது..பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது..

இதில் ரேஷன் கடை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 20 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிராமசபையை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து உள்ளனர். 12 வார்டு கொண்ட உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
 1. கோபாலப்பட்டிணம் 
 2. கணபதிப்பட்டினம் 
 3. குறிச்சிவயல் 
 4. முத்துக்குடா (மீனவர்) 
 5. நாட்டாணி 
 6. ஆர்.புதுப்பட்டினம்  (மீனவர்) 
 7. ஆர்.புதுப்பட்டினம்  (முஸ்லிம்) 
 8. முத்துக்குடா (முஸ்லிம் ) 
 9. அண்டியப்பன்காடு 
 10. கூடலூர் 
 11. பாதரக்குடி 
 12. புரசக்குடிஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments