ஆவுடையார்கோவிலில் காலை உணவு திட்டத்தில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரியா குப்புராஜா பயிற்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 14 மையங்களில் உள்ள 42 சமையலர்கள், உதவியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments