தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 3 வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் கணவன்-மனைவி மற்றும் சின்ன குழந்தையும் இருப்பதால் பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இருவரும் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள்.
முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றிய போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றினார். இதையும் படியுங்கள்: சென்னையை போட்டு தாக்கும் வெப்ப அலை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று தகவல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித் கூறியதாவது:-
நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது. எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாக கருதுவதில்லை. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு இருவரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும். அரசு நம்பி பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.