உலக கடல்பசு தினம் : ராமேஸ்வரத்தில் இருந்து மனோரா வரை இருசக்கர வாகன பேரணி


உலக கடல்பசு தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் இருந்து தொடங்கியது.


3 நாட்கள் இருசக்கர வாகன பேரணி

நாள் 1 (22-05-2023)  - இராமேஸ்வரம் முதல் இராமநாதபுரம் வரை 

நாள் 2 (23-05-2023)  - முத்துக்குடா முதல் மணமேல்குடி கோடியக்கரை வரை 

நாள் 3 (24-05-2023)  - கட்டுமாவடி முதல் மனோரா வரை 

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல்பசு, கடல் குதிரை, கடல்பாம்பு, கடல் அட்டைகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

கடலில் வளரும் புற்களை உண்டு வாழக்கூடிய இந்த கடல் பசுக்கள் தற்போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்த கடல்பசுக்கள் அழியும் நிலையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அதனை பாதுக்காக்கும் பணியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 28ம் தேதி உலக கடல் பசு தினம் கொண்டாடப்பட உள்ளது. கடல் "பசுவை பாதுகாப்போம் கடலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் டேராடூனில் உள்ள இந்திய‌ வனவிலங்கு நிறுவனம் 3 நாட்கள் இருசக்கர வாகன பேரணியை நடத்த திட்டமிட்டு பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் இருந்து இருசக்கர பேரணி தொடங்கி 3 நாட்கள் கழித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா சென்றடைய உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments