கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து நடத்தும் புட்பல்ஸ் தெரப்பி 15 நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் (Foot Pulse Therapy).!கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து புட்பல்ஸ் தெரப்பி 15 நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் (Foot Pulse Therapy) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் முஸ்லீம் ஜமாஅத்தார்கள் மற்றும் புதுக்கோட்டை கம்பேனியோ நைஸ் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து  03/07/2023 (திங்கட்கிழமை) முதல் 18/07/2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை கோபாலப்பட்டிணம் தங்கமணி திருமண மஹாலில் 15 நாள் மாபெரும் புட்பல்ஸ் தெரப்பி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் ஜமாஅத் தலைவர்கள் LION.O.S.M.முகம்மது அலி ஜின்னா, LION.A.S.M.செய்யது முகம்மது தலைமையிலும், ஜமாஅத் துணைத் தலைவர் LION.K.R.முகம்மது மீராசா வரவேற்புரை நிகழ்த்த, ஜமாஅத் செயலாளர் M.ராஜா முகமது, ஜமாஅத் இணைசெயலாளர் V.E.சாகுல் ஹமீது,  ஜமாஅத் பொருளாளர் K.M.முகமது உசேன்,  ஜமாஅத் கணக்கர் M.அக்பர் தீன், ஜமாஅத் நிர்வாகிகள் J.முகமது இக்பால், R.M.இஸ்ஸதீன், E.M.A.சவுக்கத் அலி, K.முகம்மது நாசர், M.ஷேக் முகமது, M.ஜகுபர் அலி ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

மருத்துவ முகாமை அவுலியா நகர், மௌலானா மௌலவி S.ஜாபர் சாதிக் ஆலிம் முனீரி ஒருங்கிணைப்பு செய்கிறார்.

இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தங்களை அன்புடன் கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அழைக்கின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments