மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடர்பான அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம்!மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடர்பான அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்கநிலை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான கூட்டத்தினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 2023-24-ஆம் நிதி ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இத்திட்டமானது 2023 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி 2024 பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களுக்கு  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வீதம் ஆறு மாதங்களுக்கு 200 மணி நேரம் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத அனைவரையும் கண்டறிந்து இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவியுடன் முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கண்டறிதல் வேண்டும் என்றும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் தன்னார்வலர்கள் உதவியுடன் குடியிருப்பு பகுதியில் முற்றிலும் எழுத படிக்க தெரியாத வரை கண்டறிதல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல் பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி உடைய கற்கும் ஆர்வம் உள்ள தன்னார்வலரை கண்டறிந்து அவர்களை பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தன்னார்வலர் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நல பணி திட்டம் சாரண சாரணியர் தேசிய மாணவர் படை மாணவர்கள், வயது வந்தோர் கல்வி திட்டத்தில் முன்னர் பணியாற்றிய தன்னார்வலர் ஆசிரியர்கள், இல்லம்தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை தன்னார்வலர்களாக சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து தொடக்க மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments