அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து...
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி டவுன் கே.கே. நகர் தெருவை சேர்ந்தவர் முகமதுமீரா. இவரது மனைவி பதுர் நிஷா (வயது 58). இவரது 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். பதுர் நிஷா மட்டும் வீட்டு வேலைக்காரி பெண்ணான பரிதாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 17-ந் தேதி பதுர்நிஷா வீட்டை பூட்டிவிட்டு அரசர்குளத்தில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார்.
அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் பதுர்நிஷா ஒருவாரம் அங்கு தங்கியிருந்து அவரது தம்பியை கவனித்து வந்தார். இதையடுத்து பதுர்நிஷா அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
நகை-பணம் திருட்டு
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு பதுர்நிஷா தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பதுர்நிஷா வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.