புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (22-06-2023) முதல் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது




தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கோவில்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் கடையும், அறந்தாங்கியில் 4 டாஸ்மாக் கடையும், ஆலங்குடியில் ஒரு கடையும், கறம்பக்குடியில் 2 கடையும், கீரனூரில் 2 கடையும், கீரமங்கலம், திருமயத்தில் தலா ஒரு கடையும் என மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 12 கடைகள் மூடப்படுவதன் மூலம் மொத்த எண்ணிக்கை 132 ஆக குறைந்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments