பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகை

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் வந்து மொத்தமாக ஆடுகளை வாங்கி செல்வது உண்டு. இதேபோல் சந்தையில் ஆடுகளை விற்பதற்கும் ஏராளமானோர் வருவார்கள்.

இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அப்போது முஸ்லிம்கள் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்தளிப்பது உண்டு. இதனால் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டும்.

ரூ.2 கோடிக்கு விற்பனை

அந்தவகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கிடா வகை ஆடுகளை இறைச்சிக்கடை உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். உடல் எடை அளவை பார்த்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டன. இதில் ரூ.2 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments