புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக திருக்கோகர்ணம் தேர்வு
தமிழகத்தில் போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் குற்றங்களை தடுத்தல், சட்டம்-ஒழுங்கு, வழக்குகள், கைது நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பணிகளை ஆராய்ந்து விருதுகள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டின் செயல்பாட்டில் தமிழகத்தில் முதல் 3 இடங்களில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே விருது வழங்கப்பட்டன. அதனைதொடர்ந்து மாவட்டங்களில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் கடந்த 2021-ம் ஆண்டு சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசாருக்கு போலீஸ் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அந்தந்த மாவட்டங்களில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments