கீழக்கரை கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் நகராட்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
கீழக்கரை கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று நகராட்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். இதற்காக அவர் கீழக்கரை நகரில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையை சுற்றி பார்த்த அவர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தார். அதன்பின்னர் அவர் கூறும் போது,

மிகவும் எழில் கொஞ்சிய இடமாக கீழக்கரை கடற்கரை திகழ்கிறது. ஆனால் மிகுந்த வருந்தத்தக்க நிகழ்வாக இந்த கடலில் கழிவுநீர் கலந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் கடல் வளம் பாதிப்பதோடு சுற்றுப்புற சூழலும் கெடும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் ஒத்துழைத்து கழிவுநீர் கடலில் சேர்வதை தடுக்க வேண்டும்.இந்த பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதோடு தனி கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன் என்றார்..மேலும் கழிவு நீர் கடலில் கலப்பதை முற்றிலும் தடை செய்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மரம், செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். கடற்கரை ஓரம் அதிகம் புன்னை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.அப்போது கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா உடன் இருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments