22 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கள்




புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 22 பேருக்கு ரூ. 1.08 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா இந்த உதவிகளை வழங்கினாா்.

முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளில் தகுதியுடையோருக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழகத்தில் 100 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தொடா்ந்து ஆலங்குடி, திருமயத்தில் செப்டம்பா் மாதம் இம் முகாம்கள் நடைபெறவுள்ளன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments