ஜெகதாப்பட்டினத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA திறந்தது வைத்தார்
ஜெகதாப்பட்டினத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA திறந்தது வைத்தார்
 
ஜெகதாப்பட்டினத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA திறந்தது வைத்தார்கள்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கீழமஞ்சகுடி ஊராட்சி  ஜெகதாப்பட்டினம் கிராமத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து  ₹ 7,00,000/=(ஏழு லட்சம்) மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமசந்திரன் M.L.A திறந்து வைத்தார்கள்.

திறப்பு விழாவில் , மணமேல்குடி திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவருமான
திரு.எஸ்.எம். சீனியார் அவர்களும், ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.K.P. முத்துக்குமார் அவர்களும், கீழமஞ்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.I. அகமதுஅரபு அவர்களும் மற்றும் ஒன்றிய பொறியாளர், அரசு ஒப்பந்தக்காரர் அவர்களும், ஊராட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், ஜமாத்தார்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள்   கலந்து கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments