புதுக்கோட்டை வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அகலரெயில் பாதை சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டன. இதில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் ரெயில்வே வளர்ச்சியில் மேலும் ஒரு அடையாளமாக மாறியது.
புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம், தென்மாவட்டங்கள், திருச்சி செல்லும் விரைவு ரெயில்கள் பல இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 100 கிலோ மீட்டராக உள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க கூடிய வகையில் வேகமாக செல்லும். இந்த பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
சோதனை ஓட்டம்
இதையடுத்து இந்த வழித்தடத்தில் தண்டவாள பாதைகள் அனைத்தும் ஆராயப்பட்டு மேம்படுத்தப்பட்டன. இதற்காக தண்டவாளங்கள் சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி ரெயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்ட ரெயில் நாளை காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெறும். இதில் 40 நிமிடங்களில் 89 கி.மீ. தூரத்தை கடந்து காரைக்குடி சந்திப்பிற்கு 9.40 மணிக்கு செல்லும்.
பயண நேரம் குறையும்
இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெறும் நிலையில் திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தின் வேகம் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்படும். இதனால் புதுக்கோட்டைக்கு வந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயண நேரம் சில நிமிடங்கள் குறையவாய்ப்பு உள்ளது.
PC Credit : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.