இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயில் ஜெய்ப்பூர் வழியாக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்ப்பூர் வரை நீட்டிப்பு வட மேற்கு ரயில்வே அறிவிப்பு






ராமேசுவரத்தில் இருந்து இராமநாதபுரம் மானாமதுரை புதுக்கோட்டை திருச்சி அரியலூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர் வழியாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் இடையே ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது இந்த ரெயில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்ப்பூர் கன்டோன்மெண்ட் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நீட்டிப்பு ரெயில் சேவை வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் ராமேசுவரத்தில் இருந்து நள்ளிரவு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு புதன்கிழமை அதிகாலை 1.48 மணிக்கு வந்து 1.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சனிக்கிழமை தோறும் பெரோஸ்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 3.58 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது







இனி புதுக்கோட்டையில் இருந்து ராஜஸ்தான் மட்டுமல்ல பஞ்சாப்/ஹரியானா மாநிலங்களுக்கும் செல்லலாம்!

ஆம் அஜ்மீர்-ராமேஸ்வரம்-அஜ்மீர் ஹம்சபார் ரயில் ஜெய்ப்பூர் வழியாகவும் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்ப்பூர் கன்டோன்மென்ட்(Firozpur Cantt.) ரயில் நிலையம் வரை நீடிப்பு!




வரும் 03/10/23 முதல்
20974/ராமேஸ்வரம்-அஜ்மீர்-பெரோஸ்ப்பூர் Cantt. ஹம்சபார் ரயில்(செவ்வாய் மட்டும்)

⧭மண்டபம்- 11:20 pm செவ்வாய் புறப்பட்டு
⧭ராமநாதபுரம்-11:45 pm
⧭புதுக்கோட்டை-01:48/01:50 am
⧭சென்னை எழும்பூர்-08:25 am(புதன்)
⧭அஜ்மீர்- 10:45/10:55 pm(வியாழன்)
📌கிஷன்கர்ஹ்-11:22/11:24 pm (வியாழன்)
📌ஜெய்ப்பூர்-01:15/01:20 am(வெள்ளி)
📌தாசில் பட்ரா- 07:24/07:26 am(வெள்ளி)
📌எல்லேனாபாத்-08:23/08:25 am(வெள்ளி)
📌ஹனுமன்கர்ஹ்-09:30/09:40 am(வெள்ளி)
📌மண்டி டப்வாலி- 10:25/10:25 am(வெள்ளி)
📌பத்தின்டா-11:35/11:45 am (வெள்ளி)
📌பெரோஸ்ப்பூர் Cantt.-01:30 pm(வெள்ளி) செல்லும்

வரும் 07/10/23 முதல்
20973/பெரோஸ்ப்பூர் Cantt.-அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயில்(சனி மட்டும்)

📌பெரோஸ்ப்பூர் Cantt.-05:55 am(சனி) புறப்படும்
📌பத்தின்டா-07:40/07:50 am (சனி)
📌மண்டி டப்வாலி- 08:23/08:25 am(சனி)
📌ஹனுமன்கர்ஹ்-09:20/09:30 am(சனி)
📌எல்லேனாபாத்-10:11/10:13 am(சனி)
📌தாசில் பட்ரா- 11:17/11:19 am(சனி)
📌ஜெய்ப்பூர்-05:15/05:30 pm(சனி)
📌கிஷன்கர்ஹ்-06:56/06:58 pm (சனி)
⧭அஜ்மீர்- 07:50/08:10 pm(சனி)
⧭சென்னை எழும்பூர்-09:55 am(திங்கள்)
⧭புதுக்கோட்டை-03:58/04:00 pm(திங்கள்)
⧭ராமநாதபுரம்-06:43 pm(திங்கள்) வரும்

அஜ்மீர்-பெரோஸ்ப்பூர் cantt இடையில் உள்ள ரிங்காஸ்(Ringas), சிகர்(Sikar), சுரு(Churu), சதல்பூர்(Sadulpur), நோஹர்(Nohar), சங்கரிய(Sangaria) உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்

ராமேஸ்வரம்-அஜ்மீர் ரயில் பெரோஸ்ப்பூர் cantt. வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ள ரயில் நிலையங்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

News & Pc Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments