கோட்டைப்பட்டிணம் சரகம், கொடிக்குளம் வருவாய் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் 08-11-2023 மக்கள் தொடர்பு முகாம்




கோட்டைப்பட்டிணம் சரகம், கொடிக்குளம் வருவாய் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் 08-11-2023 மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டிணம் சரகம், கொடிக்குளம் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 08.11.2023 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 27.10.2023 அன்று காலை 10.30 மணியளவில் மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டிணம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments