புதுக்கோட்டையில் பால் பண்ணை முதல் மாலையீடு வரை 8 கிலோ மீட்டர் தூர நடைபயண பாதை திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நாளை தொடங்கி வைக்கிறார்




புதுக்கோட்டையில் பால் பண்ணை முதல் மாலையீடு வரை 8 கிலோ மீட்டர் தூர நடைபயண பாதை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

நடப்போம் நலம் பெறுவோம்

தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதய நோய்கள் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சைகளை வழங்க தமிழக அரசின் மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதய நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் சார்ந்த பாதிப்புகளை தடுக்கும் விதமாகவும், அதன் மூலம் ஏற்படக்கூடிய இதய பாதிப்புகள், பக்க விளைவுகளை குறைப்பதற்கும், நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கு, அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு 8 கி.மீ. தூரம் கொண்ட பாதை தேர்வு செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பான குடிநீர் வசதிகள், சாலையோர அமரும் நாற்காலிகள், நிரந்தர கிலோ மீட்டர், குறியீடுகள் ஆகியவை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

நாளை தொடக்கம்

புதுக்கோட்டையில் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபயண பாதை பால்பண்னை பஸ் நிறுத்தம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வழியாக மாலையீடு வரை சென்று திரும்ப பால்பண்ணை வந்தடைதல் பாதை மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோர் நலச்சங்க உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு 8 கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments