ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




திருவரங்குளத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில், 6 ஏக்கரில், ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது திருவரங்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கால்பந்து மைதானம்

முதல்-அமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ள விளையாட்டு கட்டமைப்புகள் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் 1.200 மீ, 400 மீ தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம், கையுந்து பந்து மைதானம், கூடைபந்து மைதானம், கோ-கோ மைதானம், கபடி மைதானம், பார்வையாளர்களுக்கான இருக்கைகள், ஸ்டோர் அறை, அலுவலக அறை, உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை அமைய உள்ளது.

ரூ.50 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மைதானம் ரூ.3 கோடி மட்டுமல்ல இன்னும் அதிகமான தொகையை பெற்று இந்த விளையாட்டு மைதானத்தை 6 மாத காலத்திற்குள் கட்டி முதல்-அமைச்சர் திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பினை தர முடியும்.

புதுக்கோட்டை-ஆலங்குடி சாலை விரிவு

சிறு விளையாட்டு மைதானங்களை உருவாக்கி இந்த பகுதியில் இருக்கின்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெறக்கூடிய இடமாக மாற்றப்பட உள்ளது. கொரோனா கால கட்டங்களில் மருத்துவமனை அமைக்க இடம் இல்லாமல் தேடிக் கொண்டிருந்தோம். இது போன்ற இடங்களில் பேரிடர் காலங்களில் இந்த விளையாட்டு மைதானத்தை பாதுகாப்பு மையமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை அண்ணா சாலையிலிருந்து கைக்குறிச்சி வரை 5 கி.மீ.வரையில் நான்கு வழி சாலையாக மாற்ற முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றி. இதேபோல் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையும், விரிவுபடுத்தப்பட உள்ளது என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு-வடிவேல், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, வட்டார வளர் ச்சி அலுவலர்கள் ஆஷாராணி, கோகுலகிருஷ்ணன், திருவரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கே.வி.எஸ். சுப்பையா கருணாஸ், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு வீராங்கனை ரெக்‌ஷனா நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments