அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக தென் மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக நிவாரண பொருட்கள் சேகரிக்கப்படுகிறது
  
இதற்கு  அறந்தாங்கி வட்டாட்சியர் அவர்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக வர்த்தக நிறுவனங்களில் பெறப்பட்ட ரூபாய் 64 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் திரு.எஸ்.காமராஜ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று அறந்தாங்கி வட்டாட்சியர் திரு.ஜபருல்லா அவர்களிடம் வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் வர்த்தக சங்க செயலாளர் வெ.தவசுமணி பொருளாளர் எஸ்.சேக்அப்துல்லா. மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள்* வர்த்தக பெருமக்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments