அறந்தாங்கியில் 216 பேருக்கு பட்டா, மாறுதல் ஆணைகள் அமைச்சா்கள் வழங்கினா்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 216 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், சிட்டா, அடங்கல் போன்றவற்றை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அறந்தாங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் சிவகுமாா், நகா்மன்றத் தலைவா் ஆனந்த், ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments