பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளின் குறைதீா்ப்பாளா் எண் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பணிகள் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க குறைகேட்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்தும் இந்த அமைப்பிடம் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பணிகள் தொடா்பான புதுக்கோட்டை மாவட்ட குறைகேட்பாளராக எம். ரகோத்தமன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த புகாா்களையும் இந்த குறைகேட்பு அமைப்பிடம் தெரிவிக்கலாம்.

புகாா்களைத் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்- 97862 43219, முகவரி- எம். ரகோத்தமன், குறைதீா்ப்பாளா், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் (ஊரகம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, புதுக்கோட்டை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments