அம்மாபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த ஒரு வருடமாக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அம்மாபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஏழைகள், சாலையோர ஆதரவற்றோர்கள், வழிப்போக்கர்கள் என 210 பேருக்கு இலவசமாக சிக்கன், மட்டன், வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு வீடு தேடியும், பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்றும், வயது முதிர்ந்தவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு பார்சல் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செய்து வருகின்றனர். ஏழைகளுக்கு உணவு வழங்கும்  இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments