கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து நடத்திய வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றும் முகாம்!




கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றும் முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம் 05-02-2024 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அவுலியா நகர் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

இதேபோல பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பூத் மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு விண்ணப்பித்தனர்.

இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 நபர்களும், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்குச்சாவடி மாற்றம் ஆகியவற்றிற்கு 20 நபர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என 100-க்கும் மேற்பட்டோர் நபர்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

குறிப்பு: இதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் இரண்டாவது முகாம் நாளை ஜனவரி 07 புதன்கிழமை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.

எனவே இந்த முகாமை அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments