கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து நடத்தும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம்!
கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து நடத்தும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து நடத்தும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம் இன்று பிப்ரவரி 5 நடைபெறுகிறது 

நாள் : 05-02-2024

இடம் : அவுலியா நகர் பள்ளிவாசல் 

நேரம்: காலை 10 மணி முதல் 

2024 ஜனவரி 1-ல் 18-வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10-ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10-ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு

வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எந்தெந்த படிவம் எதற்கு?

வாக்காளர் பட்டியில் புதிதாக பெயர்சேர்க்க, படிவம் 6; பெயர் நீக்கம் செய்ய படிவம் 7; பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8; ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ பூர்த்தி செய்து வழங்கவேண்டும். www.nvsp.in என்கிற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கப்பட்டது. 

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments