ராமேஸ்வரம் - ஓகா (குஜராத்) வாராந்திர விரைவு ரயில் பெட்டிகள் 08-03-2024 முதல் LHB ஆக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் பெட்டிகள்   மார்ச் 8ம் தேதி முதல் LHB ஆக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

16733/16734 ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் பெட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8ம் தேதி)முதல் LHB ரக நவீன பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டவுள்ளது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட ரயில் பயணத்தை தமிழ்நாடு பகுதி மக்கள் அடைய முடியும்.

அதன்படி இனி இந்த ரயிலின் பெட்டியமைப்பு:-

2 - 2 ஆம் வகுப்பு AC பெட்டிகளும்,
8 - 3 ஆம் வகுப்பு AC பெட்டிகளும்,
6 - படுக்கை வகுப்பு பெட்டிகளும்,
2 - முன்பதிவில்லா பெட்டிகளும்,
1 - மாற்றுத்திறனாளிகளுக்கான முன்பதிவில்லா பெட்டியும்,
1 - pantry car பெட்டியும்,
1 SLRD பெட்டிகளும் அமையும் படியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் - ஒகா 

இந்த ரயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு(தற்காலிகமாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது) ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை  காட்பாடி ,திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, டோன், கர்னூல் சிட்டி, காச்செகுடா, நிஜாமாபாத், நந்தேத், ஜல்னா, அவுரங்காபாத் நாகர்சோல், மன்மத், சூரத், அகமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர், துவாரகா வழியாக திங்கட்கிழமை காலை குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகா சென்று சேரும்.

ஒகா - இராமேஸ்வரம் 

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை இந்த ரயில் (16734 ஓகா - ராமேஸ்வரம்) ஓகாவில் இருந்து புறப்பட்டு துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், அகமதாபாத், சூரத், நாகர்சோல், அவுரங்காபாத், மன்மத், நந்தேத், நிஜாமாபாத், காச்செகுடா, கர்னூல் சிட்டி, கடப்பா, திருப்பதி, காட்பாடி வழியாக  மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு இரவு 7:25 க்கு சென்று சேரும்.

இந்த ரயில் தொலைதூரம் செல்லும் ரயில் என்பதால் டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தாலும் பயணத்திற்கு முன்னதாக confirm ஆகிவிடும். எனவே இந்த ரயிலை தமிழ்நாடு மக்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல ஐயமின்றி அதிகம் முன்பதிவு செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments